’வாட்ஸ் அப்’ ஆல் மணப்பெண்ணிற்கு நடந்த சோகம்... திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை... பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

Report
114Shares

வாட்ஸ் அப்பில் அதிகநேரம் மணப்பெண் செலவு செய்த காரணத்தால், நடக்க இருந்த திருமணத்தை மாப்பிள்ளை, மற்றும் அவரின் குடும்பத்தினர் திடீரென்று ரத்து செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், அம்ரோகா நகரைச் சேர்ந்தவர் உருஜ் மெகந்தி. இவரின் மகளுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த குவாமர் ஹெய்திக்கும் திருமணம் கடந்த 5-ம் தேதி நிச்சயக்கப்பட்டு இருந்தது. திருமணத்துக்கு முதல்நாள் மணமகள் வீட்டார், பெற்றோர் அனைவரும் மணமகன் குடும்பத்தாரை வரவேற்க காத்திருந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. இதையடுத்து, மணமகள் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று காரணம் கேட்டனர். அப்போது, அதற்கு மணமகன் ஹைதர் கூறுகையில், உங்கள் பெண் அதிகநேரம் வாட்ஸ்அப்பிலேயே இருக்கிறார்.

வாட்ஸ்அப்பை அதிகமாக பயன்படுத்துகிறார். பெண்ணும் அழகாக இல்லை. ஆதலால் திருமணம் நடக்காது. திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினால், ரூ.65 லட்சம் வரதட்சணையாக அளிக்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால், மணமகள் தந்தை உரூஜ் மெகந்தி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகளை திருமண நிச்சயம் செய்துவிட்டு, தற்போது திடீரென பெண் சரியில்லை, வாட்ஸ்அப் அதிகநேரம் பயன்படுத்துகிறார் என்று மாப்பிள்ளை வீட்டார் குற்றம்சாட்டுகிறார்கள் திருமணத்தையும் நிறுத்திவிட்டனர். திருமணத்தை நடத்த வேண்டுமென்றால், ரூ.65 லட்சம் கேட்கிறார்கள்.

மேலும் திருமணத்தை நடத்துங்கள் என்று மணமகன் வீட்டாரிடம் கெஞ்சினேன், ஆனால், அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து, அம்ரோகா போலீஸ் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவி்த்துள்ளனர்.

4357 total views