பூதாகரமாக வெடிக்கும் பெட்ரோல் விலை பிரச்சினை... வேலையாட்களின் அலட்சியமான பதில்

Report
49Shares

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியைப் சந்தித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலையில் ரூ.3 அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் விலைக்கு இணையாக டீசல் விலையும் போட்டி போட்டு அதிகரித்திருக்கிறது.

இதனால் மக்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க கண்டித்து காங்கிரஸ் தலைமையில் முழு அடைப்பு போரட்டம் நடத்தி வருகிறது. இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது.

பொது மக்கள் ஆவேசம்

பொது மக்களிடம் இது மிகவும் ஆவேச பட வைத்துள்ளது. சரியான பெட்ரோல், டீசலயை பங்குகளில் அடிப்பது இல்லை என்றும், விலையை அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்கள்.

குறித்த காணொளியில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அடிக்க வரும் பொதுமக்கள் சரியான முறையில் பெட்ரோல் அடிக்கவில்லை என்று பங்குளின் உரிமையாளர்களிடம் கோபத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.. இதை காணொளியாக நபர் ஒருவர் எடுத்து பதிவிட்டுள்ளார்.

2324 total views