நகம் கடிக்கும் பழக்கத்தால் மாணவிக்கு நடந்த சோகம்.. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்

Report
181Shares

மாணவி ஒருவர் தொடர்ந்து நகம் கடித்து வந்ததால் மாணவியின் கட்டை விரலில் புற்றுநோய் ஏற்பட்டு அதை வெட்டி எடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து கவுண்டி துர்ஹாம் பகுதியைச் சேர்ந்த கொர்டேனி விதோர்ன். கல்லூரியில் படித்து வரும் இவருக்கு கை விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது வலது கட்டை விரல் நகம் கருப்பாக நிறம் மாறத் தொடங்கியுள்ளது.

மேலும் சரும பிரச்சினை என நினைத்த அவர் அதற்காக சில கிரீம்களை பூசியுள்ளார். ஆனாலும் கருமை நிறம் மாறாததால் 4 ஆண்டுகளாகக் கையை துணியால் மூடி மறைத்து வைத்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் விரலில் அதிகமான வலியும் ஏற்பட மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் விதோர்ன். அவரது விரலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு 'அக்ரல் லெண்டிஜினஸ் சப்லுகுஜுவல் மெலனோமா' என்ற அரிய வகை புற்றுநோய் உண்டாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின் அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. ஆனால் புற்றுநோயை அவரது உடலிலிருந்து முழுமையாக அகற்ற முடியாத நிலையில் விதோர்ன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களே! சற்று உஷாராக இருங்கள்..

7350 total views