மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் இன்றைய சில இளைஞர்கள் செய்வது சரியா?

Report
264Shares

தற்போதைய காலத்திற்கு ஏற்ப மனிதர்களாகிய நாம் மாற வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயமாகவும், தேவையாகவும் இருக்கிறது.

பல புதியமுறை தொழில்நுட்பங்களைக் கொண்ட கைப்பேசிகளை இளைஞர்கள் பயன்படுத்துவது போன்று பெரியவர்கள் பயன்படுத்துவது இல்லை.

ஆனாலும் பிள்ளைகள் சமூகத்தில் தனது தந்தையை உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காகவும், உறவுகளிடம் சிரமப்படாமல் கதைப்பதற்கும் அதிகளவில் வாங்கிக் கொடுக்கின்றனர்.

அவ்வாறான கைப்பேசியினை எவ்வாறு பாவிப்பது என்று தெரியாவிட்டாலும் உறவுகளிடம் பேசுவதற்கும், வாங்கிக் கொடுத்த பிள்ளைகளின் பாசத்திற்காக பெரியவர்கள் வைத்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் இவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் கைப்பேசியில் சில வாலிபர்கள் பொழுதுபோக்கிற்காகவும், விளையாட்டுத்தனமாகவும் VIBER,WHATSAPP போன்றவற்றில் ஆபாசமான வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்புவார்கள் அதை எப்படி தடுப்பது என்பது கூட வயோதிபர்களுக்கு தெரியாது அதனால் பல விளைவுகள் குடும்பங்களுக்குள்ளே வருகிறது.

இது குறித்த சிறிய விவாதமே மன்மதன் பாஸ்கியின் இந்த வாரம் SAME TO YOU தலைப்பாகும். இதோ அக்காட்சி....

8030 total views