சீனாவில் கலைகட்டும் தமிழர்களின் விளையாட்டு... கல்லாங்காய், சொட்டாங்கல் ஆட்டம்!

Report
84Shares

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கல்லாங்கா விளையாட்டு தற்போது சீனாவில் பிரபலமாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று கல்லாங்காய். இது பெண்கள் விளையாடும் விளையாட்டாகும். இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். இது பொதுவாக ஜல்லிக் கற்களால் விளையாடப்படுகின்றன.

ஒரு கல்லை மேலே எறிந்து அது கீழே விழுவதற்குள், கீழே இருக்கும் மற்ற கற்களை வாரி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே போகும் காய் தவறி கீழே விழுந்தால், அவுட் ஆகி விட்டதாக பொருள். இந்தக் கல்லாங்காயை ஐந்து அல்லது ஏழு கற்களைக் கொண்டும் விளையாடலாம். இப்படிப்பட்ட விளையாட்டுகள் தற்போது கிராமப்புறங்களில் எங்காவது விளையாடப்படலாம் என நம்புவோம். ஆனால் நகர்ப்புறங்களில் குழந்தைகள் செல்போன், வீடியோ கேமில் பொழுதை கழிக்கின்றனர்

சீனாவில் பிரபலம்

சீனாவிலோ இந்த கல்லாங்காய் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. நம் நாட்டில் வளரும் மூலிகைகளை வெளிநாட்டில் அதிக விலை கொடுத்து வாங்கியே பழக்கப்பட்ட நாம் விளையாட்டில் கோட்டை விட்டு வருகிறோம். நம் நாட்டு குழந்தைகள் சீன மொபைல்களில் விளையாடி சோம்பேறியாவதும், அந்நாட்டினர் கல்லாங்காய் விளையாடி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்க்கும் போது என்னத்த சொல்வது என்றே தெரியவில்லை.

நம் பாரம்பரிய விளையாட்டை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த காணொளி உள்ளது.

4020 total views