தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியம்... உண்மை தெரிந்த கணவனின் நிலை என்ன?

Report
195Shares

கள்ளக்காதல் விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இன்னும் அபிராமி கதையே ஓய்ந்த மாதிரி இல்லை. அதுக்குள்ளே இன்னொரு கள்ளக்காதல் விவகாரம் கைது வரை சென்றுவிட்டது.

அண்ணாநகர் கிழக்கு, 'எல்' பிளாக்கைச் சேர்ந்தவர், ஞானசூரியன், வயது 42. ரயில்வே ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி உமாதேவி, இவருக்கு வயது 41. 2 மகள்கள் உள்ளனர். உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். இவரது சகோதரர் பெயர் மணிகண்டன் 42. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் உமாதேவியும், மணிகண்டனும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி அது கள்ளக்காதலாக மாறியது மட்டுமின்றி இருவரும் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்.

தனது மனைவி தினமும் இரவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தன்னை தூங்க வைத்துவிட்டு மணிகண்டனிடம் தனிமையில் இருந்து வந்தது பின்பு தான் ஞானசூரியனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஞானசூரியன் அண்ணாநகர் பொலிசில் இதுகுறித்து புகார் செய்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து புகாரின்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை அதிரடியாக கைது செய்தனர்.

8062 total views