காதலர் தினம் நடிகை சோனாலிக்கு என்ன நடந்தது? நெட்டிசன்களுக்கு கணவர் வேண்டுகோள்...!

Report
118Shares

சோனாலி பிந்த்ரேவின் உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவரது கணவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனாலி பிந்த்ரேவுக்கு வயது 43. தமிழில் கண்ணோடு காண்பதெல்லாம், காதலர் தினம் அகிய இரு படங்களில் நடித்துள்ளார். இவர் குணாலுக்கு ஜோடியாக நடித்த காதலர் தினம் படம் தமிழில் ஹிட் அடித்ததோடு மட்டுமின்றி, அந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.

2002-ம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்ட இவர் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு தொலைக்காட்சிகளின் நடன நிகழ்சிக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. மஹாராஷ்டிர மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கதம் தனது ட்விட்டர் பதிவில், சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

உடனடியாக தனது பதிவை நீக்கிய அவர், நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரின் ஆரோக்கியமான உடல்நிலயை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்வீட் போட்டார்.

இந்நிலையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று சோனாலியின் கணவர் கோரிக்கை வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “தயவு செய்து சமூக வலைதளத்தை அதிக பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேவையின்றி வதந்திகளை பரப்பாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.

4671 total views