காப்பாற்றப்பட்டவர் எதற்காக கதறுகிறார்?.. இன்று வெளியேறுபவர் கமல் எதிர்பார்க்காதவரா?

Report
1275Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களைக் கடந்து தற்போது இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பயங்கர போட்டியில் காணப்படும் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பினை சம்பாதித்தவர் என்றால் ஐஸ்வர்யா தான்... இந்த வாரம் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்.

தற்போது இன்று சென்ட்ராயன் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய ப்ரொமோ காட்சியில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் கமல் எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

மற்றொரு காட்சியில் இந்த வாரம் பாதுகாக்கப்பட்ட ஐஸ்வர்யா கதறி அழுகிறார். அவரின் அழுகையை சமாதானப்படுத்த யாஷிகா, மும்தாஜ் பேசுவதாக முடிந்துள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதற்குக் காரணம் கோடிக்கணக்கில் நிகழ்ச்சியினை பார்க்கும் மக்கள் வாக்கு அளிப்பதில் ஆர்வம் எடுத்துக் கொள்ளாதே என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

loading...