சொப்பனசுந்தரி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்! மாப்பிளை யார் தெரியுமா?

Report
2741Shares

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது

பிருத்விராஜ் நடித்த 'ஜே.சி. டேனியல்' படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் 'குக்கூ' படத்தில் கோடையில மழ போல, வீர சிவாஜி படத்தில் இடம்பெற்றுள்ள 'சொப்பன சுந்தரி நான்தானே' உள்ளிட்ட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் தனது வித்தியாசமான குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார். விஜயலட்சுமியாக கேளாவில் மீன் விற்று படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.

இந்நிலையில், விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்று விட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது மிமிக்ரி கலைஞனான அனூப் என்பவருடன் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனூப் இன்டீரியர் டெக்கரேஷன் காண்ட்ராக்டராக உள்ளார். திருமண நிச்சயதார்த்தம் செப்டம்பர் 10ம் தேதி விஜயலட்சுமி வீட்டில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து திருமணம் அக்டோபர் 22ம் தேதி வைக்கம் மகாதேவர் கோயிலில் நடக்கிறது.

87760 total views