சக மாணவிகளையும், அவர்களின் தாயாரையும் ஆபாசமாக வீடியோ எடுத்த மாணவன்... அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

Report
192Shares

தமிழகத்தை சேர்ந்த பெங்களூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவிகள், அவர்கள் தாய் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் அப்லோடு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பெங்களூரில் தனியார் பொறியில் கல்லூரியில் படித்து வருபவர் சித்தார்த் (21). தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சித்தார்த், ஆனால், படிப்போடு சேர்த்து, சில்மிஷ வேலைகளையும் ஆரம்பித்துள்ளார் சித்தார்த். உடன் படிக்கும் ஒரு மாணவியுடன் நெருக்கம் வளர்த்துக் கொண்ட சித்தார்த் அவரை வைத்து, கொடூரமான செயல்களில் இறங்கிவிட்டார். அப்படி என்ன செய்தார் என கேட்கிறீர்களா?

தனது உடன் படிக்கும் மாணவிகள் தங்கியுள்ள ஹாஸ்டல் அறைகளில் செல்போன் கேமராவை வைத்து அவர்கள் குளிக்கும் காட்சிகளை, உடை மாற்றும் காட்சிகளை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளார் சித்தார்த்.

உதவி செய்த சக மாணவி

லேடீஸ் ஹாஸ்டலில் எப்படி செல்போனை வைத்து சித்தார்த் வீடியோ எடுத்தார் என்ற கேள்வி எழந்தது. அங்குதான், அவரது தோழி உதவி செய்துள்ளார். அவரும் ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கிறார். பெண் என்றும் பாராமல், சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்தது சித்தார்த்தின் தோழிதான். அந்த வீடியோவை சித்தார்த்திற்கு அவர் அனுப்புவது வழக்கமாம்.

நிர்வாண வீடியோ

கூட படிக்கும் பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் குளிக்கும் வீடியோக்களை ஃபேக் பேஸ்புக் ஐடிகளை ஓபன் செய்து, சம்மந்தப்பட்ட பெண்களின் பேஸ்புக் பக்கத்தின் கமெண்ட்ஸ் பகுதியில் போஸ்ட் செய்வது வழக்கமாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பரப்பன அக்ரஹாரா போலீசில் புகார் அளித்தார். போலீசாரும், அதுபோன்ற பேஸ்புக் ஐடியில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் குற்றவாளி யார் என்பது அப்போது தெரியவில்லை.

போலீஸார் கண்டுப்பிடிப்பு

இந்த நிலையில் சமீபத்தில் மாணவியின் தாய் வெளியூரிலிருந்து இங்கு வந்து மகளுடன் சில நாள் ஹாஸ்டலில் தங்கியுள்ளார். அவர் குளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் சித்தார்த். எனவே மீண்டும் ஒரு மாணவி போலீஸில் இது பற்றி புகார் அளித்தார்.

இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போது, போலி பேஸ்புக் ஐடிகள் தஞ்சாவூரிலுள்ள ஐபி எண்ணில் இருந்து ஆபரேட் ஆவது தெரியவந்துள்ளது. அது சித்தார்த்தின் உறவுக்காரர் வீட்டு ஐபி எண்ணில் இருந்து ஆபரேட் ஆவது தெரியவந்தது. அந்த ஐபி அட்ரசை வைத்து தான் சித்தார்த் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை உடனே கைது செய்தனர். உதவி செய்த தோழியை இன்னும் கைது செய்யவில்லை. இவர் ஏன் இதை செய்தார் என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

7168 total views