ஓரினச் சேர்க்கை குறித்து நடிகர்களின் கருத்து... என்ன கூறினார்கள் தெரியுமா?

Report
260Shares

ஓரினச் சேர்க்கை விரோதமானது அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், நடிகர், நடிகைகள் இதற்கு வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

கஸ்தூரி

ஓரின சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்க தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. காதலுக்கு கண்ணும் வயதும் சாதியும் இல்லை என்பதுபோல் பாலினம் இல்லை என்பது எனது கருத்து. மேலை நாடுகளில் இது வினோதமானது இல்லை. அன்போடு நெருங்கிய இருவரை ஒரே பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏன் பிரிக்க வேண்டும்.

இருவர் விரும்பி செய்தால் அது குற்றம் இல்லை. விரும்பாமல் நடக்கும் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்தான் குற்றம். ஓரின சேர்க்கையாளர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

திரிஷா

ஓரின சேர்க்கை சம்பந்தமான 377 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம உரிமைக்கு செல்வதற்கான வழி கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

சித்தார்த்

மீண்டும் எமது மக்களை பாதுகாத்துள்ள மதிப்புமிக்க உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த நாள். இந்த நாளுக்காக போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்! என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரேயா

ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு. இதுதான் உண்மையான சுதந்திரம். நன்றி என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

ஆர்யா

எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து பிடித்தவர்களுடன் இருப்பது அவரவர் உரிமை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறு. மாற்றங்களை ஏற்கவேண்டும். இந்த தீர்ப்பு ஒரு மாற்றத்துக்கான வழிதான் என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

8234 total views