பிரித்தானியாவில் மற்றுமொரு அபிராமி... காதலனுடன் சேர்ந்து ஒரு வயது குழந்தையை கொன்ற தாய்!

Report
59Shares

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன் குழந்தையை, முன்னாள் காதலன் தாமஸ் உடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனுடன் இணைந்து ஒரு வயது குழந்தையை கொன்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.

அபிகைல் லெதர்லேண்ட் 26 வயதுடைய பெண்னுக்கு ஒரு வயதும் 10 மாதங்களும் கொண்ட பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அபிகைல் தனது முன்னாள் காதலனுடன் தனது குழந்தையை ஈவிரக்கம் இன்றி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அபிகைலின் வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிஸார். குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பித்த பொலிஸார் அபிகைலியையும் தாமஸ் இருவரையும் கொலை வழக்கில் கைது செய்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2783 total views