ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற போது மூக்கை கடித்த 17 வயது இளைஞன்... அதிர்ச்சியான தகவல்!

Report
255Shares

தனியாக சென்ற ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் அவரது மூக்கை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ், அவர்களின் மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

பின்னர் பேருந்தில் இறங்கி சாலையில் சென்று கொண்டிருந்தார். குளத்தின் அருகே சென்றபோது திடீரென அதே பகுதியைச் சேர்ந்த சிவா(17) வயது இளைஞர் மீனாவை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். தடுமாறி கீழே விழுந்த போது மூக்கை சிவா கடித்து குதறினார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை தடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த ஆசிரியையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது சிவாவின் வீடு பாம்பூரி வாய்க்காலின் கரையில் உள்ளது. வீட்டின் முன்பு உள்ள பாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம். ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இதை சிவா தனக்கு சாதகமாக பயன்படுத்தி பலமுறை அந்த வழியாக சென்ற பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை.

இதற்கு முன்பும் இதே போல் நடந்த சம்பவத்தில் சிவாவுக்கு 17 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி பொலிசார் அவரை பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அங்கிருந்து சமீபத்தில் வீட்டிற்கு வந்த சிவா மீண்டும் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் சிவாவை கைது செய்துள்ளனர்.

8822 total views