கலைஞர் கருணாநிதி யாருடைய தீவிர ரசிகர் தெரியுமா? வெளியான சுவாரஷ்ய தகவல்!

Report
478Shares

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி காலமானதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும், அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் நா. சீனிவாசன், கருணாநிதி தன்னுடைய 50 ஆண்டுகால நண்பர் எனவும், அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், கிரிக்கெட் விளையாட்டின் மீது அலாதி பிரியம் கொண்டவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸின் தீவிர ரசிகர். சென்னையில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை அவ்வப்போது நேரில் வந்து கண்டு ரசிப்பார்.

அணி தோல்வியடைந்தால் மிகவும் ஏமாற்றமடைந்து விடுவார். சென்னையில் இந்த ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டி இவ்வருடம் சென்னை அணி கோப்பை வெல்வதை பார்த்திருப்பார் என்று தெரிவித்தார்.

மேலும், மு.கருணாநிதியின் மகள் கனிமொழி பகிர்ந்துகொண்ட மற்றொரு செய்தியில், வெளியூருக்குச் சென்றிருந்தாலும் அவ்வப்போது வீட்டுக்கு போன் செய்து ஸ்கோர் கேப்பாராம். கபில்தேவின் ரசிகனாக இருந்த தான் தோனி ரசிகனாக மாறியுள்ளதை கருணாநிதியே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டின் மீது அத்தகைய ஈர்ப்பு கொண்டிருந்த கருணாநிதிக்கு ஹர்பஜன், முரளி விஜய் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

16528 total views