சரவணன் மீனாட்சி ரட்சிதா... கண்ணீருடன் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்! வீடியோ

Report
505Shares

சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்துள்ள ரச்சிதா மஹாலக்‌ஷ்மி கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்றார்.

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நெடுந்தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதன் முதல் சீசனில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா சந்திரன் ஆகியோர் சரவணன் மீனாட்சியாக நடித்து ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்டனர்.

இதையடுத்து இரண்டாவது சீசனில் கவின் மற்றும் ரச்சிதா மஹாலஷ்மி ஜோடி நடித்தனர். தொடர்ந்து வந்த மூன்றாவது சீசனில் ரச்சிதா மஹாலக்‌ஷ்மியுடன், ரியோ நடித்து வருகிறார்.

தற்போது, சரவணன் மீனாட்சியின் 3-வது பாகம் நிறைவுக்கு வருவதாக அறிவித்துள்ளார் ரச்சிதா. இது குறித்து அவர் தனது ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், ஹாய் மை டார்லிங்ஸ்..! சரவணன் மீனாட்சி சீரியலின் இறுதிநாள் ஷுட்டிங். 6 ஆண்டுகளாக நீங்கள் அளித்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. மீனாட்சி'யாகிய நான் சரவணன் மீனாட்சியில் இருந்து விடைபெறுகிறேன் என ஆனந்த கண்ணீருடன் இந்த விடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

17482 total views