8 நிமிடங்களில் அமெரிக்கர் செய்த செயல்: ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தருணம்! வீடியோ

Report
130Shares

அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் நகரில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு அவர்களில் 7 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

தெற்கு லூசியானாவில் இருந்து 4 ஆயிரம் சிப்பி மீன்கள் கொண்டு வரப்பட்டு நன்றாக பொரித்து வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் சேர்ந்து சாப்பிட பீர், மற்றும் பிற பானங்கள் வைக்கப்பட்டிருந்தன.

போட்டி தொடங்கியதும் அதில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கினர். அவர்களில் விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்த டேரன் பிரீடன் வெற்றி பெற்றார். அவர் 8 நிமிடத்தில் 40 டஜன் அதாவது 480 சிப்பி மீன்களை சாப்பிட்டு சாதனை படைத்தார்.

அவருக்கு அடுத்தப்படியாக 156 சிப்பி மீன்களை சாப்பிட்ட மைக்கேல் லெஸ்கோ 2-வது இடம் பிடித்தார். இவர் அரிசோனாவை சேர்ந்தவர். இந்த போட்டி நடுவர்கள் மத்தியில் நடைபெற்றது. போட்டியில் வென்ற டேரன் பிரீடனுக்கு உலக சிப்பி மீன் சாப்பாட்டு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

5123 total views