கண்ணீர் விட்டு அழுத பாலாஜி! காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்

Report
87Shares

புரோமோவில் காட்டப்பட்டது போல் மஹத்துக்கும் பாலாஜிக்குமான சண்டை நேற்றைய நிகழ்ச்சியில் வெடித்தது.

டாஸ்கில் உணவை கூட காசு கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற டாஸ்க்கை போல இல்லாமல் இதில் மோதல்கள் அதிகமாகவே ஏற்பட்டன.

உதாரணமாக சென்றாயன் சாப்பிடுவதற்கு உணவு எடுக்க முயன்ற போது ஷாரிக் வந்து தடுத்தார். கோபமடைந்த சென்றாயன் நான் விளையாடவில்லை என்று கோபித்துக் கொண்டார்.

திருடர்களான டேனி, யாஷிகா ஐஸ்வர்யா மூவரும் திருடி வந்த ஆப்பிளை விதிமுறைப்படி பொதுமக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாத மஹத் பசியில் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டு விட்டார். அருகில் இருந்த டேனியலும் தன் பங்குக்கு ”ஐயா வாழ்க” என்று ஏற்றி விட கோபத்தில் பாலாஜி “இதுக்கு பிச்சையெடுத்து சாப்பிடலாம்” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.

இதன் பிறகுதான் மஹத்துக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அடித்துக் கொள்ளாத குறைதான். அந்த அளவுக்கு கெட்டவார்த்தைகளால் மாறி மாறி திட்டித்தீர்த்தனர்.

”போடா காமெடி.ஜோக்கரு” என்று மஹத் திட்டியது பாலாஜியை மிகவும் பாதிக்கவே அவர் அறைக்கு சென்று அழுத் தொடங்கினார். வழக்கம் போல யோசிக்காம வார்த்தையை விட்டு பிறகு வருந்தும் மஹத் இந்த முறை பாலாஜியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். “உன் காலுல வேணாலும் விழுறேன், மன்னிச்சிடுண்ணே” என்று பாலாஜியின் கால்களை பற்றிக் கொண்டார்.

அதற்கு பாலாஜி “என்னை கொஞ்சம் தனியா விடு” என்று கூறவும் மஹத்தை கூட்டிச் சென்றார் சென்றாயன்.

4153 total views