நான் பாட்டி ஆகிட்டேன்: ட்விட்டால் அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

Report
216Shares

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மாறி, மாறி நடித்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லையென்றாலும், அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவார்.

அந்த வகையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் வயதையொத்த பெண்கள் எல்லாம் அம்மாவாக இருக்க, நான் இந்த இரண்டு பேருக்கு பாட்டியாகி உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

என்னது அம்மா ஆகாமலே ராய் லட்சுமி எப்படி பாட்டியானார் எனக் குழப்பமாக இருக்கிறதா.

மற்ற சில நடிகைகளைப் போலவே, இவரும் பூனை ஒன்றை தனது மகள் போன்று வளர்த்து வருகிறார். அது இப்போது இரண்டு குட்டிகளைப் போட்டுள்ளது. அந்த பூனைக் குட்டிகளுக்குத் தான் அழகிய பாட்டி ஆகியிருக்கிறார் ராய் லட்சுமி. இதனால் தற்போது ராய் லட்சுமியின் வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதிய உறுப்பினர்களின் வரவால் நாங்கள் இப்போது பெரிய குடும்பம் ஆகி விட்டோம் என ராய் லட்சுமி இந்தப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

6930 total views