உலகில் உள்ள சில வினோதமான மிருகங்களை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படமும் வீடியோவும் உள்ளே!

Report
192Shares

Croatia வில் Zoran Poparic எனும் விவசாயின் பண்ணையில் உள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி விதிகளுக்கு மாறான தோற்றத்துடன் காணப்பட்டது.

8 கால்களுடன் பிறந்த அந்த குட்டி ஆட்டிற்கு ஆண், மற்றும் பெண் உறுப்புக்கள் ஒருங்கே அமைந்திருந்தன.

இரு வெவ்வேறு கருக்கலாக உருவாகி இடையில் தடைப்பட்டதால் அக் குட்டி அவ்வாறு பிறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Octogoat என பெயர் சூட்டப்பட்ட இவ் விலங்கு பிறந்து 7 நாட்களில் இறந்து போனது.

இரண்டு கால் நம்பிக்கை!

Faith, மூளையில் ஏற்பட்ட ஏதோ ஒரு மாற்றத்தினால் முன்னங்கால்கள் வளராமல் தடைப்பட்ட நாய். நடக்க முடியாத அவ் நாய் அதன் தாயினால் ஒதுக்கப்பட்டு தெருவோரத்தில் இன்னோர் நாயினால் ஆபத்து ஏற்பட இருந்த நிலையில் 17 வயதான Reuben Stringfellow எனும் பெண்ணால் தத்தெடுக்கப்பட்டது.

அவர் வீட்டில் வளர்ந்த போது, தானாகவே இரண்டு கால்களில் தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பித்தது அந்த நாய். சிறிது காலத்தில் பாய்தல், ஓடுதல் என சாதாரணமாக நாய்களிடம் இருக்கும் துடிதுடிப்புடன் வளர ஆரம்பித்தது. ஆனால், இரண்டு கால்க‌ளுடன்!

இப்போது, மருத்துவமனைகள் மற்றும் இராணுவ முகாம்களில் மனிதர்களுக்கு தெம்பூட்டுவதற்கான பணியை இவ் நாயினூடாக செய்து வருகிறார்கள்.

கறுப்பருள் இரட்டை வெள்ளை!

tow-head-snakeBlack rat snakes என அழைக்கப்படும் இவ் வகை பாம்புகள் பொதுவாக கறுப்பு நிறமானவை தாடைகள் மட்டுமே வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், நீங்கள் படத்தில் பார்ர்கும் பாம்பு வெள்ளை பழுப்பு நிறத்தில் பிறந்தது மட்டுமல்லாது இரட்டைத்தலையுடன் பிறந்தது!

1999 ஆம் ஆண்டில் இப் பாம்பின் உரிமையாளரிடம் இருந்து அமெரிக்காவில் உள்ள ஒரு காட்சியகத்தினால் சுமார் 15 000 டொலர் கொடுத்து வாங்கப்பட்டது.

அதன் 8 வயதில் மரணித்தது.


முத்தலை தவளை

3head-frogGreen Umbrella Nursery எனும் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் நுழையும் போது மூன்று தவளைகள் ஒன்றன் மீது ஒன்று நிற்பதை அவதானித்தான். சற்று நேரத்தில் அத்தவளை அசைந்த போது அது மூன்று தலைகளுடன் இருக்கும் ஒரே தவளை என்பதை அவ் மாணவன் அறிந்துகொண்டான். பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்த பின் அவர்கள் அத்தவளையை பிடித்து வைத்துக்கொண்டார்கள்.

ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் 6 காள்களுடனும் மூன்று தலைகளுடனும் பிறந்த அத் தவளை ஆரோக்கியமானதாகவும் மூன்று தலைகளும் தனித்தனியே இயங்க கூடிய வகையிலும் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

சூழல் மாசடைவும், அந்த பகுதியில் இருக்கும் அணுக்கதிர் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு தொழிற்சாலையும் இவ்வாறு தவளை பிறப்படதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

8645 total views