பேய் நடமாட்டம் இல்லாமல் உருவாகும் பிக்பாஸ் 2!.. தீவிர முயற்சியில் நிகழ்ச்சி குழுவினர்

Report
143Shares

பிரபல தனியார் தொலைக்காட்சி டி.ஆர்.பி.யில் யாரும் தொட முடியாத அளவிற்கு தூக்கிவிட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். ஒட்டுமொத்த உலக தமிழர்களின் கவனத்தையும் இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது வரும் வாரம் முதல் இரண்டாம் சீசனை துவங்கவுள்ளது. பல எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும், யாரெல்லாம் போட்டியாளர்களாக வரவிருப்பது என்ற ஆர்வம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 2 குறித்த புரோமோ வீடியோக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டின் அமைப்பை பற்றிய சில தகவல்கல் இணையத்தில் பரவிவருகிறது.

  • கடந்த சீசனை போன்று முற்றிலும் மாறுபட்ட அளவில் மாற்றியுள்ளார்களாம் நிகழ்ச்சி குழுவினர்.
  • வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் பிக்பாஸ் வீட்டின் செட்டை உருவாக்கியுள்ளார்கள்.
  • நீச்சல் குளம் அருகில் தண்டனைக்கு என்று ஒரு சிறையை அமைத்துள்ளனர். சிறையில் கழிப்பறை கிடையாது. புகைபிடிக்கும் அறை இல்லாமல் கழிப்பறையை சேர்த்து அமைத்துள்ளனர்.
  • மேலும் கடந்த சீசனில் பேய், பிசாசு என்று பயமுறுத்தும் வகையில் எதுவும் நடக்காத வகையில் மந்திர தகடுகள் வைக்கப்பட்டுள்ளது.


5038 total views