பிக்பாஸில் கமல் என்னை ஏமாற்றிவிட்டார்...கடுமையாக விமர்சித்த காயத்ரி

Report
158Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கமல்ஹாசன் நிறைவேற்றவில்லை என காயத்ரி ரகுமார் பேட்டியளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடவடிக்கையின் மூலம் பெயரைக் கெடுத்துக்கொண்டவர் காயத்ரி ரகுராம்.

சமூக வலைத்தளங்களில் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்போது கூட இவரின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் இவருக்கு எதிராக கிண்டலான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “பிக்பாஸ் 2 நிகழ்சிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படி அழைத்தாலும் செல்ல மாட்டேன். அங்கு நான் நானாக இருக்க முடியாது. ஒருமுறை சென்று பெயரை கெடுத்துக்கொண்டதே போதும். எனவே எனக்கு அதில் விருப்பமில்லை.

அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும் போது எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல. பல போட்டியாளர்களுக்கும் அவர் அன்பான வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் எதையுமே அவர் செய்யவில்லை. அந்த நிகழ்சிக்கு பின் எங்களை அழைத்தும் அவர் பேசவில்லை. பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கூட கமல்ஹாசன் எதுவும் செய்யவில்லை” என அவர் பேட்டியளித்துள்ளார்.

4890 total views