அன்று அதை மறக்க முடியுமா?... ஈழத்து கலைஞரின் கலங்க வைக்கும் படைப்பு

Report
250Shares

கடந்த 2009 மே 18 மௌனிக்கப்பட்ட ஈழ போராட்டத்தின் வடுக்களை சுமந்து முள்ளிவாய்க்கால் தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழீன வரலாற்றிலே என்றும் எவராலும் மறக்க முடியாத மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளின் 9ம் ஆண்டை நினைவேந்தி புலம்பெயர் தமிழன் பாடிய பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிறு வயதில் நாம் செய்கின்ற குறும்புகள் அனைத்துமே எப்பொழுதும் எம் மனதை விட்டு அகழ்வதில்லை என்பதை ஈழத்துக் கலைஞன் ஒருவரின் பாடல் வரிகள் நிஜமாக்கியுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் கூட யுத்தம் என்றால் என்ன என்று அறியாத வயதினில் சிறுவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி களிப்புடன் கொண்டாடிய மழழை பருவத்தை நினைவுப்படுத்திச் செல்கின்றது இந்த பாடலின் ஆழமான வரிகள்.

சிறுபிரயாயத்தில் வெறுங்காலுடன் நடப்பது, பள்ளிக்கூடம் செல்லாமல் களவாடி மாங்காய் சாப்பிடுவது, சங்கக் கடையில் கூட்டமாக சேர்ந்து கதைத்து மகிழ்வது, வாய்க்கால் தண்ணீரில் விளையாடுவது, ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடுவது இப்படி எல்லோர் வாழ்க்கையிலும் இளம்பிரயாயத்தில் நடைபெற்ற அனைத்து நினைவுகளையும் தனது ”அழகிய கனவே” பாடலினூடாக மீளவும் நினைவுபடுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் நாடுவிட்டு நாடு வந்து நமது சந்தோசம், சுதந்திரம் எல்லாவற்றையும் தொலைத்து சிறியவர் முதல் பெரியவர் வரை வேலை வேலை என்று ஓய்வே இல்லாமல் ஓடுகின்ற இந்தக் காலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கஜாவின் அழகிய கனவே எனை விட்டுத்தூரம் போகாதே..” பாடல் அமைந்துள்ளது என்பது என்றும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

9051 total views