பரிசாக பெற்ற பணத்தை ரமணியம்மா என்ன செய்தார் தெரியுமா?

Report
3128Shares

பிரபல ரிவியில் நடந்த நிகழ்ச்சியில் தனது காந்த குரலினால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.

63 வயதான இவரது காந்த குரலிற்கு வெளிநாட்டிலும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது சில படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில் ரமணியம்மமா முதலிடத்தில் வெற்றி பெறுவார் என்ற ஆர்வத்தில் காத்துக்கொண்டிருந்தனர் மக்கள்.

இதில் ரமணியம்மா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார். இவருக்கு யுவன் சங்கர் ராஜாவும், சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து 1 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசினை அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் 4 லட்சம் ரூபாய் பணமும், சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள விவசாய நிலமும் அளிக்கப்பட்டது. இதில் ரமணியம்மா தான் வாங்கிய பரிசுத் தொகையினை தனது பேரக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், தெருவோற இருக்கிற மக்களுக்கும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

ரமணி பாட்டியின் இந்த செயலை அவதானித்த பலரும் ஆச்சியமடைந்துள்ளனர்.

100338 total views