மூன்று பெண்களுக்கும் ஆர்யா செலவு செய்தது இத்தனை கோடியா? இன்று தோழியாக விடைபெறுபவர் யார்?

Report
1674Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்தாலும் அதன் பின்பு மக்களுக்கு இந்நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது சுசானா, அகாதா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர்.

இதில் வெற்றி பெறுபவரைத் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். திருமணத்திற்காக நகை, புடவைகள் எல்லாவற்றையும் எடுத்து வந்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமான அரண்மனையையும் தாண்டி, இந்த மூன்று பேர் எடுத்த நகை, புடவை எல்லாம் ஆர்யாவின் செலவு தானாம்.

அதுமட்டுமல்லாமல் திருமண ஹால் ஒன்றினையும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைக்க அதிகமான செலவு செய்துள்ளாராம்.

இதற்கு ஆர்யா கூறும் காரணம் என்னவென்றால், நான் இந்த மூன்று பேரில் ஒருவரை திருமணம் செய்யவுள்ளேன். அவர்களின் இந்த மெமரி வாழ்நாளில் எப்பொழுதும் மறக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

ஒவ்வொரு விடயத்தினையும் பார்த்து பார்த்து செய்யும் ஆர்யா இதற்கு மட்டும் ஐந்தரை கோடி செலவு செய்துள்ளாராம்.

கடந்த சில தினங்களாக ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது சீதா லட்சுமி தான் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஆர்யாவிடமிருந்து தோழியாக பிரியாவிடை பெறப்போவது யார்? என்ற கேள்வியினை சங்கீதா எழுப்பியுள்ளார். இதிலிருந்து இன்று ஒருவர் இதிலிருந்து வெளியேறப்போகிறார் என்பது தெரியவந்துள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

72966 total views