மீண்டும் வொய் திஸ் கொலவெறியா? மாஸ் காட்டிய தனுஷ்!

Report
238Shares

தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம் '3' படத்தில் இடம்பெற்ற 'வொய் திஸ் கொலவெறி டி' பாடல். இந்த பாடல் இந்தியாவைத் தாண்டி உலக முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட இந்த பாடலை முணுமுணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானது. சமூக வலைத்தளமான யூடியூபில் அதிகம் தேடப்பட்ட பாடல் “வொய் திஸ் கொலவெறி டி.

இந்தப்பாட்டு எந்த அளவுக்கு ஹிட்னு ஆனது என்று சொல்லிதான் தெரியவேண்டியதில்லை. மேலும் அனிருத் இசையமைப்பாளராக களமிறங்கிய முதல் படம் இதுதான். இந்த பாட்டு மூலம் தான் அனிருத் பிரபலமானார்.

அதேபோல நடிகர் தனுஷ், தற்போது தமிழ் சினிமாவை தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரைக்கும் சென்றுவிட்டார்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாலிவுட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், வொய் திஸ் கொலவெறி டி பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

WHY THIS KOLAVERI DI 🎶💃#dhanush performance 😂😍👌

A post shared by Dhanush (@iam.dhanush) on

10248 total views