ராஜா காலத்தில் பேஸ்புக் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

Report
125Shares

ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்…

அமைச்சர்: மன்னா…மன்னா…

மன்னர்: என்ன அமைச்சரே?

அமைச்சர்: மன்னா, நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார்.

மன்னர்: காலையில் தான் “Feeling happy with andhapuram’னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா?

அமைச்சர்: அது இல்லை மன்னா.

மன்னர்: பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே. பிறகு ஏன்?

அமைச்சர்: நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே?

மன்னர்: ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது. அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல.

அமைச்சர்: மன்னா, நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள். இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம்.

மன்னர்: நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன்.

அமைச்சர்: அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள்.

மன்னர்: தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே. இப்போ என்ன செய்வது?

அமைச்சர்: உடனே பேஸ்புக்கில் Feeling sad. cold fever’னு ஸ்டேட்டஸ் போட்டு, பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள்.

மன்னர்: இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன்.

அமைச்சர்: என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா. நானும் வருகிறேன்.

மன்னர்: அப்படியே ஆகட்டும்

5976 total views