காதலை மறுத்ததால் கையில் பிளேடு போட்ட 5 வயது சிறுவன்!

Report
634Shares

படம் பார்த்து பார்த்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல விஷயங்களில் தவறான புரிதலை கொண்டுள்ளனர்.

விளைவு என்ன ஆகிறது.....நம்முடைய நிஜ வாழ்க்கையிலும், சில பிரச்சனை உருவாகிறது...

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத வயதிலே காதலும் செய்கிறார்கள்....

ஐந்து வயது சிறுவன், தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக தோழியிடம் காதல் செய்கிறேன் என்று கூறி உள்ளான்.அந்த சிறுமிக்கு என்ன புரிந்தது என்பது கூட தெரியவில்லை....அதற்குள் இந்த சிறுவன் தன் கையில் ப்ளேடு கொண்டு அறுத்து உள்ளான்.

இதை அறிந்த மற்ற சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் போட்டு சிரிக்க தொடங்கி உள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த சிறுவனிடம், ஒரு நபர் கேள்வி மேல் கேள்வி கேட்க,மழலை முகத்துடன் பதில் கூறுகிறான் அந்த சிறுவன் .

"இரண்டு நாட்களாக காதல் செய்வதாகவும், அந்த பெண் பெயர் பவித்ரா என்றும், பவித்ரா மறுத்ததால் இரண்டு நாட்களாக சாப்பிடாமால் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுவன், ப்ளேடு எடுத்து தன் கையில் கீறி உள்ளான்.

உலகம் எங்கே செல்கிறது.....குழந்தைக்கு எப்படி காதல் என்ற வார்த்தையும்.,இது குறித்த விழிப்புணர்வும் இருக்கும்..? காரணம் பெற்றோர்களே...அவர்கள் முன் தொலைக்காட்சி சீரியல்களையும், படத்தையும் பார்த்துவிட்டு,தேவையில்லாத வார்த்தைகளை குழந்தைகள் கேட்கும் படி செய்து விடுவதே.....இதற்கெல்லாம் முதற்காரணமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

23587 total views