பிரபல சீரியல் நடிகைக்கு கல்லூரியில் நிகழ்ந்த கசப்பான சம்பவம்...

Report
270Shares

இன்றைய சினிமாவில் பெரிய திரைநட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆலியா மானஸா.

இவர் தொடரில் நடிப்பதற்கு முன்பு நடனம் ஆடும் கலைஞராக தான் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் மூலம் தான் இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஆலியா ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக இன்று சென்றுள்ளார்.

அங்கு பல கல்லூரிகளிலிருந்து வந்த மாணவர்கள் கூட்டத்தால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாமல் ஆலியா மீண்டும் அவரது அறைக்கே சென்றுள்ளார். இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நிச்சயமாக மீண்டும் புகைப்படம் எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

11269 total views