நம்பர் 13 என்றால் ஏன் எல்லாரும் பயப்படுகிறார்கள்? அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவேண்டுமா...

Report
310Shares

13 என்ற எண்ணை கேட்டாலே எல்லாருக்கும் பொதுவாக பயம். படங்களில் கூட அந்த எண்ணை பயங்கரமாக காட்டுகின்றனர். திகில் படங்களில் காணப்படும் வீட்டின் எண் கூட 13ஆக தான் இருக்கும். மேலும் இந்த எண் ராசியில்லாத எண்ணாகவும் கருதப்படுகிறது.

இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல மூலைகளில் வாழும் பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்த மக்களும் 13 எண்ணை ராசியில்லாத எண்ணாக கருதுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

நாசாவில் நிலாவுக்கு ஆராய்சிக்காக அனுப்பப்பட்ட அப்பல்லோ 13 மட்டும் தான் தோல்வியை தழுவிய ஒரே விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் தங்கள் வீட்டு எண் 13 என்றாலே, அல்லது படிக்கட்டுகளோ, மாடிகளோ அலுவலக கட்டிடங்களோ 13 என்ற வரகூடாது என்பதில் கவனம் செலுத்துவர்.

13ம் எண் என்றாலே ராசியற்றது என கருதப்படும் நிலையில், அந்த 13ம் திகதி ஒர் வெள்ளிக்கிழமை வந்தால் அது ஒரு தீயசக்தி படைத்த நாளாக உலக மக்களால் கருதப்படுகிறது. அதாவது இந்த நாளில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருப்பது, புதிய தொழில் தொடங்காதிருப்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

13 என்ற எண்ணின் பின்னால் பல கதைகள் கூறப்பட்டு வந்தாலும், அந்த எண் ராசியற்ற அல்லது ஆபத்து நிறைந்ததா? என்பது தொடர்பான எந்த வித வரலாற்று ரீதியான மற்றும் அறிவியில் ரீதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. 13 என்ற எண்ணை அடிப்படையாக வைத்து பல திகில் நாவல்கள், படங்கள் என வெளியாகியுள்ளது. எனவே, உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் 13ம் எண் மீதான காரணமற்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது.

13545 total views