கொரோனாவின் புதிய அறிகுறி... அமெரிக்க ஆராய்ச்சியில் தெரியவந்த உண்மை! மக்களே உஷார்

Report
1203Shares

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய அறிகுறிகளுடன் பரவி வருவதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை கோவிட் 19 இன் அறிகுறிகள் ஆகும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில், சில சமயங்களில் முற்றிலும் வினோதமான வழிகளிலும் தன்னை வெளிப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.

நாவல் கொரோனா வைரஸின் சில மருத்துவ அம்சங்கள் மற்ற சுவாச நோய்களைப் போலவே இருந்தாலும், சுவை மற்றும் வாசனையை இழப்பதுஷ, கண் பிரச்சினைகள், தோல் வெடிப்பு, லேசான இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் சில நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட அசாதாரண அறிகுறிகளையும் இது ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஆராய்ச்சியில் தொடர் விக்கல் கொரோனாவின் புதிய அறிகுறியாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் குக் கவுண்டி ஹெல்த், மருத்துவர்கள் 62 வயதான ஒரு நபரின் பரிசோதனை அறிக்கையை விரிவாகக் கூறியுள்ளனர்.

நான்கு நாட்கள் தொடர்ந்து விக்கல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த நபரிடம் காய்ச்சல், சுவாசப்பிரச்சினை எந்தவொரு அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை. ஆனால் கடந்த 4 மாதங்களாக 11 கிலோ எடை குறைந்த நபருக்கு திடீரென இந்த விக்கல் வந்துள்ளது.

இந்நிலையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்களுக்கு அவரது நுரையீரல் ஒரு அசாதாரண நிலையைக் காட்டியுள்ளது. நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக அவதானித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அதனை உறுதி படுத்தியுள்ளனர்.

பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காய்ச்சல் அதிகரித்து இறுதியில் கொரோனா தொற்று வெளிவந்துள்ளது. இதனால் தொடர் விக்கல் கொரோனாவின் புதிய அறிகுறி என்று கூறப்பட்டுள்ளது.

loading...