கொரோனாவை விட கொடிய புதிய வைரஸ்... எவ்வாறு பரவுகின்றது?... அறிகுறி தான் என்ன?... அவதானம் மக்களே!

Report
696Shares

சீனாவின் வடக்கு பகுதியில் வேகமாக பரவி வரும் புபோனிக் பிளேக் என்ற தொற்றுநோய் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது உள்ளிட்டவைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கோவ்ட் மாகாணத்தில் மங்கோலியாவுக்குள்பட்ட பயன்னார் பகுதியில், 27 மற்றும் 17 வயது சகோதரர்கள் இறந்த நிலையில் 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புபோனிக் பிளேக் நோய்

  • புபோனிக் பிளேக் நோய் மிகவும் அரிதான ஒன்று. இது உண்ணிகள், ஈக்கள், கொரித்து தின்றும் உண்ணிகள் ஆகியவற்றால் பரவும் வாய்ப்பு அதிகம்.
  • இது விலங்குகளுக்கான நோய் என்பதால் அவை மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எளிதில் பரவும்.

எவ்வாறு பரவுகின்றது?

  • ஏற்கெனவே இந்த நோய் பாதித்த உண்ணிக்கள் மற்ற விலங்கையோ மனிதர்களையோ கடிக்கும் போது பரவிவிடும்.
  • ஏற்கெனவே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளின் உடலில் இருந்து வெளியாகும் திரவம் மூலமும் பரவும்.
  • இந்த பிளேக்கை யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியா பரப்புகிறது.
  • செப்டிசீமிக் பிளேக் மற்றும் நிமோனிக் பிளேக் ஆகிய இரு பிளேக் நோய்களும் யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் பரவும்.

இந்நோயின் அறிகுறிகள்

  • இடுப்பு, அக்குள், கழுத்து ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் கோழி முட்டையை காட்டிலும் பெரிதாக வீங்கும். அவை இளசாகவும் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.
  • காய்ச்சல், அதிக குளிர், தலைவலி, தசை வலி, சோர்வு ஆகியவை ஏற்படும்.

loading...