இதுவும் கொரோனா அறிகுறியே... வெளியான மேலும் மூன்று புதிய அறிகுறிகளால் பீதியில் மக்கள்!

Report
289Shares

கொரோனா நோய்க்கு புதிதாக மூன்று அறிகுறிகளை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இணைத்துள்ளது.

கொரோனா அறிகுறிகளாக முதலில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றை நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்தன.

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா அறிகுறிகளாக குளிர், தசை வலி, தலைவலி, தொண்டைபுண், வாசனை நுகர்வு தன்மையில்லாமை உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில் புதிதாக மூன்று அறிகுறிகளை அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இணைத்துள்ளது. அதில், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிய மூன்று அறிகுறிகள் இணைக்கப்பட்டுள்ளன.

loading...