சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லலாம்!... ஆரம்ப அறிகுறிகள்!... யாருக்கெல்லாம் அதீத கவனம் தேவை?

Report
799Shares

இன்றைய மருத்துவ துறையில் அநேக நபர்கள் உச்சரிக்கப்படும் சொல் நீரிழிவு எனும் சர்க்கரை நோய்.

முன்பெல்லாம் வீதிக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தது மாறி தற்போது வீட்டிற்கு ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இது நோயே அல்ல... ஒரு குறைபாடு.. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினைசுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும்.

இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.

இதற்கு அடிப்படை காரணமாக கூறப்படுவது நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள்.

அதாவது உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறையேநீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாகின்றன.

இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.

  • முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.
  • இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் இரண்டாம் வகைநீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிக நார்சத்து உடைய உணவுவகைகளே ஆரோக்கியமானவை, ஏனெனில் . நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும்,ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.
யாரெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியானகட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம்கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள்,அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடிசிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

நீரிழிவு நோய் இருந்தால் முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனது போன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்தநாளங்கள் பாதிப்படைதல், கண்களில் ரெட்டினா பகுதி பாதிப்படைதல், அடிபட்டால் விரைவில்ஆறாத புண் போன்ற பிரச்னைகள் ஏற்படும், உங்களுக்குஇதுபோன்ற அறிகுறிகள் ஏதும் இருப்பின் மருத்துவரை நாடி சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்ளுங்கள்..

எப்படி தடுக்கலாம்?
  • மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.
  • எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
  • நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
ரத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகள்

பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

நெல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol)சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது.

தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.

கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம்.

முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.

தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

வரும் முன் காப்போம் என்பது எல்லா நோய்க்கும் பொருத்தமாக இருக்கும் என்றாலும் கனகச்சிதமாக பொருந்தும் என்றால் அது சர்க்கரை நோய்க்கு தான்.

எனவே ஆரோக்கியமான உணவுகள், சீரான உடற்பயிற்சி என நம் வாழ்க்கையை நாமே சீரமைத்து நீரிழிவுக்கு குட்பை சொல்லலாம்!!!

loading...