இந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்!... பெண்களுக்கு ஓர் முக்கிய தகவல்

Report
1262Shares

பெண்களுக்கு பெண் இனப்பெருக்க உறுப்புகளான கர்ப்பப்பை வாய், யோனி, ஓவரைன் மற்றும் வல்வார் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது.

இந்த புற்றுநோய்களை சரியான நேரத்தில் கவனித்து சிகச்சை பெற வேண்டும். இல்லை என்றால் உயிரை இழக்கும் ஆபத்தாக கூட ஏற்படும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

கருப்பை புற்றுநோய்

இந்த வகை புற்றுநோய் பெண்களின் கர்ப்பப்பையில் உண்டாகிறது. கருமுட்டையை உருவாக்கும் கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் வளர்கின்றன. இந்த மாதிரியான அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

அறிகுறிகள்

  • பசியின்மை
  • வயிறு நிரம்பிய உணர்வு
  • வீக்கம்
  • குடல்/சிறுநீர் பழக்கவழக்கங்களில் மாற்றம்
  • வயிற்று போக்கு மற்றும் வலி ஏற்படுதல்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பையின் கழுத்து பகுதியில் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. இது உடலுறவு மூலம் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று மூலம் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் புறக்கணிக்காதீர்கள்.

அறிகுறிகள்

  • உடலுறவுக்கு பிறகு வெளிப்படும் இரத்தம்
  • யோனி பகுதியில் துர்நாற்றம் வீசுதல்
  • இடுப்பு வலி
கருப்பைக்குள் புற்றுநோய்

கருப்பையின் உள் பகுதிகளில் ஏற்படுகிறது. பெண்களின் கருப்பை பார்ப்பதற்கு வெற்று, பேரிக்காய் வடிவில் இருக்கும். மாதவிடாய் நின்ற பிறகு இரத்த போக்கு ஏற்படுதல் இதன் அறிகுறியாகும். புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், குழாய்களைக் கொண்டு கருப்பையை முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியும்.

யோனி வகை புற்றுநோய்

இது ஒரு அரிய வகை புற்று நோயாகும். அசாதாரணமாக வெள்ளைப்படுதல், இரத்த போக்கு, உடலுறவின் போது வலி ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

வல்வார் புற்றுநோய்

இது புற்றுநோயின் அரிய வடிவமாகும். வயதான பெண்களில் பெண்ணுறுப்புகளின் வெளிப்புறத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் வல்வார் புற்றுநோயை நீங்கள் குணப்படுத்தலாம்.