ஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து? மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்

Report
1694Shares

ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்கள் பல்வேறு கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைளால் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் அதிகமான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரந்தால், அது உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதிலும் ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான சீரற்ற இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் சூடு, களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை தெரியும்.

சிலருக்கு உடல் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இடையூறால் வேகமான எடை இழப்பு அல்லது உடல் பருமனை அனுபவிக்கக்கூடும்.

ஆண்களுக்கு ஹைப்பர் தைராய்டு இருந்தால் வெளிப்படும் சில முக்கியமான அறிகுறிகள்

  • ஆண்கள் வேகமாக உடல் எடையை இழக்கக்கூடும். இதற்கு காரணம் இந்த நிலைமையால் வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படுவது தான்.
  • இந்த பிரச்சனை உள்ள ஆண்கள், எவ்வளவு தான் கலோரி அதிகமான உணவுகளை உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை குறையும். சில சந்தர்பங்களில், தைராய்டு நிலையால் உடல் எடை அதிகரிக்கும்.
  • ஒருவரது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
  • ஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள் முறையற்ற இதயத் துடிப்பு அல்லது இதய படபடப்பை சந்திப்பார்கள்.
  • சில சந்தர்பங்களில், இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 100 முறை துடிக்கும். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு தவிர, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதயம் வெடிக்கப் போவது போன்றும் சிலர் உணரலாம்.
  • வயதானவர்களாக இருந்தால், இவர்களுக்கு இதய செயலிழப்பு என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.
  • குறிப்பாக வழக்கத்தை விட அதிகமான குடலியக்கம், ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை வெளிப்படுத்துகின்றன.
  • சில சமயங்களில் ஹைப்பர் தைராய்டு இருந்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும்.

மற்ற அறிகுறிகள்

அதிகமான வியர்வை அதிகமான வியர்வை, அதிக உடல் சூடு, தசை நடுக்கம், மிகுந்த களைப்பு.

ஆண்களில் ஹைப்பர் தைராய்டிசத்தின் குறைவான பொதுவான அறிகுறிகளாவன முடி உதிர்தல், வாந்தி, வீங்கிய கண்கள், கண்களில் எரிச்சல் மற்றும் அதிக கண்ணீர் உற்பத்தி.

மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடல் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

56155 total views
loading...