நீரிழிவு நோயாளிகளை மட்டும் குறி வைத்து தாக்கும் புதிய ஆபத்தான நோய்! அலட்சியம் வேண்டாம்... எப்படி தப்பிப்பது?

Report
391Shares

உண்மை என்னவென்றால், சர்க்கரை நோய் என்பது, உலகில் ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் ஒரு கொடிய நோய்.

எப்போது ஒரு மனிதனின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறதோ அப்போது தான் அவரது உடலில் பல்வேறு பகுதிகள் பாதிப்படைகின்றது.

சர்க்கரை நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உள்ளன. டைப் 1 சர்க்கரை நோயை விட, டைப் 2 சர்க்கரை நோய் தான் மிகுந்த பாதிப்பை உண்டாக்கக்கூடியது.

ஏனென்றால், டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, தமனிகள், இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

இத்தகைய நுரையீரல் நோய்க்கான பொதுவான அறிகுறி என்றால், மூச்சுத்திணறல் தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அறிகுறி இருந்தால் நிச்சயம் புறக்கணிக்கவே கூடாது.

கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய்

கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய் (Restrictive Lung Disease) என்பது ஒரு நபரை நீண்ட நாட்களுக்கு அவதிக்குள்ளாக்கக்கூடிய ஒரு வகை நுரையீரல் நோயாகும்.

பொதுவான நுரையீரலின் பணி என்பது, உள்ளே செல்லும் மூச்சுக் காற்று நுரையீரல் முழுவதும் நிரம்பி பின்பு, கார்பன்டைஆக்ஸைடை வெளியேற்றும்.

அப்படி காற்று நுரையீரலுக்குள் செல்லும் போது, நுரையீரல் பலூன் போல விரிந்து பின்பு இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவே, கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோயில், நுரையீரலால் முழுவதுமாக விரிய முடியாமல் போகும்.

இதனால், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதனால், தான் இந்த நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் இரண்டுமே மிக கொடிய நோய் தான்.

கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோயின் அறிகுறிகள்

  • மூச்சு விடுவதில் சிரமம்
  • குறுகிய மற்றும் ஆழமற்ற சுவாசம்
  • உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல்
  • கடுமையான இருமல் தொல்லை
  • நாள் முழுவதும் சோர்வாக உணர்வது மற்றும் ஆற்றலின்மை
  • மனசோர்வை ஏற்படுத்தக்கூடிய எண்ணங்கள்
  • திடீர் உடல் எடை குறைவு
  • கடுமையான நெஞ்சு வலி

கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் பொதுவாக டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இத்தகைய நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்றே சொல்லலாம்.

நுரையீரல் இழைநார் வளர்ச்சி கூட ஒரு வகையான ஆர்.எல்.டி. வகை தான். சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடும்.

ஒருவேளை உங்களுக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தால், உங்களுக்கு ஆர்.எல்.டி. ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாகவே உள்ளது.

எனவே, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, சர்க்கரை நோய் இருந்து, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
15831 total views
loading...