கொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும்! ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி

Report
590Shares

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்கள் சாலையில் சுருண்டு மடியும் சம்பவங்களின் அதிர்ச்சிக் காட்சி தற்போது வெளிவந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 131 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 5300 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும். இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

இந்த நோய் தாக்குதல் காரணமாக சீனாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் கூட வெளியே செல்லவில்லை. அங்கு இதனால் பலர் தண்ணீர், உணவு இன்றி கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

சாதாரண நோய் தாக்கத்தினால் இருக்கும் நோயாளிகள் கூட தங்களது மருத்துவத்தேவையினை சந்திப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையில் சுருண்டு விழுந்து 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சாலையிலும், மெட்ரோவில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் மனிதர்களின் காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் பாதிப்பால் கீழே விழும் நபர்களை அடுத்தவர்கள் காப்பாற்றக்கூட முன்வரவில்லை. சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும் மாஸ்க் கிடைக்காமல் தண்ணீர் போத்தலை தலையில் அணிந்துகொண்டு உயிரைக் காப்பாற்றி வருகின்றனர்.

24989 total views