ஒரே நேரத்தில் 14 பேரை தாக்கும் கொடூரம்! கொரோனா வைரஸால் 90 ஆயிரம் பேர் பாதிப்பு.... சீன செவிலியர் வெளியிட்ட பரபரப்பு காட்சி!

Report
149Shares

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

இதுவரை குறித்த வைரஸ் பாதிப்பால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 1500க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் செவிலியர் ஒருவர் பரபரப்பு காணொளியினை வெளியிட்டுள்ளார். சீனாவில் உள்ள ஷகாண் மாகாணத்தில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றுவதாக கூறிய குறித்த செவிலியல் மக்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் எங்கு கண்டறியப்பட்டதோ அந்த இடத்திலிருந்து பேசுகிறேன். நான் இங்கு உங்களிடம் உண்மையை பேச வந்துள்ளேன். சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸுக்கு 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவில்லையெனில் ஒரே சமயத்தில் 14 பேரைத் தாக்குவதாகவும், புத்தாண்டு பிறந்துள்ளதால் சீன மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று புத்தாண்டு கொண்டாட விரும்பிய இத்தருணத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் நீங்கள் எங்கும் வெளியே செல்லாதீர். எந்த கொண்டாட்டங்களும் வேண்டாம். வெளியே விற்பனை செய்யப்படும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இப்போது பாதுகாப்பாக இருங்கள். ஆண்டுக்கு ஒரு முறை புத்தாண்டு வந்து கொண்டுதான் இருக்கும். அடுத்த முறை குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிக் கொள்ளலாம். முதலில் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

வுகான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு முகமூடி, முகக் கண்ணாடி, துணிகளை நன்கொடையாக வழங்குங்கள். கொரோனா வைரஸ் இரண்டாம் நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல் நிலையில் இருந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் இரண்டாம் நிலையில் மிகவும் கடினம் என அந்த செவிலியர் எச்சரிக்கும் விதமாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

loading...