கொரோனாவால் பாம்பு கறியை தவிர்த்து காய்கறி மார்கெட்டில் சீனர்கள்... விஞ்ஞானிகள் கூறிய பகீர் தகவலால் ஏற்பட்ட மாற்றம்

Report
236Shares

கொரோனா வைரஸ் பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளதையடுத்து மக்கள் அசைவத்தினை விட்டுவிட்டு காய்கறி மார்க்கெட்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

சீனாவில் சமீபகாலமாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வூஹான் நகரில், இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், கடுமையான சளி, தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை நோயின் முதல் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடித்து வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும், புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீற்றரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, 13 நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த போது, பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சீன மக்கள் அசைவத்தினை விட்டு காய்கறி மார்கெட்டிற்கு செல்கின்றனர். ஆனாலும் தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்தியரான பிரீத்தி மகேஸ்வரிக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு 1 கோடி ரூபாய் தேவைப்படுவதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக உதவியை அவரது சகோதாரர் நாடியுள்ளார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுறது.

9642 total views