கொத்து கொத்தாக மனிதர்களை கொல்லும் இந்த கொடிய நோய் உங்களுக்கு இருந்தால் கூடவே புற்றுநோயும் வரும்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Report
760Shares

மருந்துகள் தயாராகும் வேகத்தை விட நோய்களும் அதன் வீரியமும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் எப்போவாவது தான் நோய்கள் கொத்து கொத்தாக மனிதர்களை கொள்ளும். ஆனால், தற்போது மோசமான அளவில் இது மனித இனத்தையே பலவீனம் கொள்ள செய்கிறது.

பல்வேறு நோய்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே நமக்கு மோசமான பாதிப்பை தருகின்றன.

உலக அளவில் சர்க்கரை வியாதி என்பது ஒரு மோசமான நோயாகவே கருதப்படுகிறது. காரணம் இதனால் உண்டாகும் பக்க விளைவுகள் தான்.

சர்க்கரை நோய் நாம் நினைப்பது போன்று அவ்வளவு சாதாரணமான ஒன்று கிடையாது. நம் உடலில் இன்சுலின் உற்பத்தி தடைப்படும் போது அவை சர்க்கரை நோயிற்கு வழி வகுக்கிறது. இதற்கு கார்போஹைட்ரட்டின் அளவு அதிகரிப்பதும் ஒரு முக்கிய காரணம். சில நேரங்களில் மோசமான விளைவை இவை உண்டாக்கி விடும்.

உடலில் அமில தன்மை அதிகமாகினால் ஏராளமான பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றானாக உண்டாகும். அவற்றில் மிக முக்கியமானது தான் புற்றுநோயும். அமில தன்மை அதிகரித்தல் புற்றுநோய் செல்களை எளிதாக வளர்த்தெடுப்பதற்கு மூல காரணமாக இருக்கிறது

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் நிச்சயம் அவை புற்றுநோய் செல்களுக்கு இருப்பிடத்தை உருவாக்கி கொடுக்கும். நொதித்த சர்க்கரையும், குறைவான அளவு ஆக்சிஜனும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

இதேவேளை, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அளவு குறைகிறது இவை கணையத்தின் செயல்பாடு பாதிப்பதால் உண்டாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புற்றுநோய் உண்டாகும் என கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே நீரிழிவு நோயாளிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

loading...