இப்படி தொண்டை வலி வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்! இந்த கொடிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்? ஜாக்கிரதை

Report
220Shares

பால்வினை நோய், தகாத உடலுறவின் காரணமாக ஏற்படுகிறது என்று தான் நம்மில் 99% மக்கள் தெரிந்திருக்கிறோம்.

சரும தொற்றின் காரணமாக கூட பால்வினை நோய் பரவலாம் என்று கூறப்படுகிறது. சில பால்வினை நோய்களை முதல் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.

சில பால்வினை நோய்களுக்கு முழுமையான தீர்வு கிடையாது. இதற்கு வாழ்நாள் முழுக்க மருந்து மற்றும் சிகிச்சையின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும்.

STD என்று அறியப்படும் பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள் பிறப்புறுப்பில் மட்டும் காணப்படுவது அல்ல. அவை முழு உடலிலும் காணப்படலாம்.

சலி சாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை புறக்கணிக்காமல் உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். இல்லை சில சமயம் உயிரை இழக்க நேரிடும்.

கிளமிடியா நேயின் அறிகுறிகள்

 • சிறுநீர் கழிக்கும்போது வலி
 • அடி வயிற்று வலி
 • தொண்டையில் புண்கள்
 • வீங்கிய டான்சில் அல்லது நிணநீர் முனைகள்
 • வாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்

மேகவெட்டை நோயின் அறிகுறிகள்,

 • வீங்கிய மூட்டுகள், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் போன்ற வலி
 • குடல் இயக்கங்களில் வலி
 • ஆசன வாய் அரிப்பு
 • தொண்டை புண்
 • தொண்டை வீக்கம்
 • வாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்

ஹெபடிடிஸ் நேயின் அறிகுறிகள்

 • சோர்வு
 • குமட்டல் மற்றும் வாந்தி
 • அடி வயிற்று வலி
 • பசியின்மை
 • காய்ச்சல்
 • அடர்ந்த சிறுநீர்
 • தசை மற்றும் மூட்டு வலி
 • கண்களின் வெள்ளை பகுதி மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக தோன்றுதல் (மஞ்சள் காமாலை )

எச் ஐ வி நோயின் அறிகுறிகள்

 • காய்ச்சல்
 • தலைவலி
 • தொண்டைப் புண்
 • வீங்கிய நிணநீர் சுரப்பிகள்
 • தடிப்பு
 • சோர்வு
 • வயிற்றுப்போக்கு
 • எடைக் குறைப்பு
 • இரவில் வியர்வை
 • அசாதாரணமான தொற்று
 • அடிக்கடி தலைவலி

குறிப்பு
சிலர் பால்வினை நோய்க்கு தீர்வே இல்லை என எண்ணுகிறார்கள். இது போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் ஆரம்பத்திலேயே வைத்தியரை நாடவும்.
8145 total views
loading...