கை நடுக்கம் இருக்கிறதா?.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்!

Report
1024Shares

நடுக்கம் என்பது இப்போது பலருக்கும் இருக்கும் குறைபாடு ஆகும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் ஆற்றல் குறைபாட்டால் நடுக்கம் ஏற்படுவது சாதாரண ஒன்றுதான். ஆனால் இன்று இளம் வயதினருக்கே நடுக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக கை நடுக்கம் என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும்.

நடுக்கத்தில் இரண்டு வகைகள் உள்ளது, ஒன்று ஓய்வு நேர் நடுக்கம் அதாவது தசைகள் ஓய்வில் இருக்கும்போது ஏற்படுவது. மற்றொன்று செயல்நேர நடுக்கம், இது வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படுவது. இந்த பதவில் கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பலமடங்கு ஸ்களீரோசிஸ்

பலமடங்கு ஸ்களீரோசிஸ் ஆங்கிலத்தில் MS என்று அழைக்கப்படும் இந்த குறைபாடு உள்ளவர்கள் கை நடுக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மைய நரம்பு மண்டலத்தின் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

பக்கவாதம்

தமனிகளில் இரத்தக்கட்டு ஏற்படும் போது அது மூளைக்கு செல்லும் இரத்தத்தை தடுப்பதால் அது மூளை பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நமது நரம்பியல் பாதைகளில் கோளாறுகள் ஏற்படுவதால் அது நடுக்கம் ஏற்பட காரணமாக அமைகிறது.

மூளை காயம்

உடல்ரீதியாக மூளையில் ஏற்படும் பாதிப்புக்கூட நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மூளையுடன் ஒருங்கிணைவு ஏற்படுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நரம்புகளில் பாதிப்பு ஏற்படும் போது அது கை நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

பார்க்கின்சன் நோய்

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் செயல்நேர நடுக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதேசமயம் ஓய்வு நேர நடுக்கம் இரண்டு கைகளிலும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுவாக நடுக்கம் என்பது உடலின் ஒரு புறத்தில் இருந்துதான் தொடங்கும் பின்னர் அது உடல் முழுவதும் பரவும். அதிக உணர்ச்சிவசப்படும் நேரங்களிலும் கை நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அத்தியாவசிய நடுக்கம்

இது மிகவும் பொதுவான ஒரு இயக்க குறைபாடு ஆகும், இதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நடுக்கம் பொதுவாக உடலின் இரண்டு புறங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் பொதுவாக எந்த கை அதிக பயன்பாட்டில் உள்ளதோ அந்த பக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இது செயல்படும்போது வரலாம் அல்லது ஓய்வில் இருக்கும்போதும் வரலாம். பரம்பரை மூலமாக இது பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டிஸ்டோனிக் நடுக்கம்

ஒருவருக்கு டிஸ்டோனியா பாதிப்பு இருந்தால் அவர்களின் மூளை உறுப்புகளுக்கு தவறான செய்திகளை அனுப்பும். இதன் விளைவாக தசைகள் அதிகமாக செயல்படுவது, செயல்படாமல் இருப்பது, விரும்பத்தகாத இயக்கங்கள் போன்றவற்றை செய்யும். இளம் வயதில் இருப்பவர்களுக்கு உடலின் எந்த தசைகளில் வேண்டுமென்றாலும் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

எப்படி நிறுத்தலாம்?

காஃபின் மற்றும் ஆம்பெட்டமைன்கள் போன்ற நடுக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களின் உபயோகத்தை குறைக்க வேண்டும். இது நடுக்கத்தில் இருந்து பெரிய நிவாரணத்தை வழங்கும். உடல் சிகிச்சை என்றழைக்கப்படும் பிஸிக்கல் தெரபி உங்கள் தசைகளின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வரவும், வலிமையை அதிகரிக்கவும், செயல்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவும். பதட்டம் மற்றும் பயம் போன்றவை நடுக்கம் ஏற்பட காரணமாக இருந்தால் அதற்கு உளவியல் சிகிச்சை தர வேண்டியது அவசியம்.

loading...