குடல்புற்றுநோய் யாருக்கு ஏற்படும்? இவங்க மட்டும் உஷார்....

Report
526Shares

மரபணு, பரம்பரை மற்றும் உணவு பழக்கமுறை இது போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படும் புற்றுநோய் உடல் உறுப்புகள் அனைத்தையும் சீரழிக்கிறது.

அந்த வகையில் ஏற்படும் குடல் புற்றுநோய் (Colorectal Cancer) என்பது பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் புற்றுநோயைக் குறிக்கிறது. இந்த புற்றுநோய் பெருங்குடலில் சாதாரண புண்ணாக தொடங்கி, பின் அது புற்றுக்கட்டிகளாக மாறும்.

ஆரம்ப அறிகுறிகளை வைத்து, இந்த புற்றுநோயை அறிந்துக் கொள்வது மிகவும் கடினம் என்பதால், நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

எனவே, யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை அறிந்துக் கொண்டு, அப்பிரச்சனை ஏற்பட காரணமாக உள்ள விடயத்தை தவிர்ப்போம்.

குடல் புற்றுநோய் யாருக்கு ஏற்படும்?

  • 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
  • அதிக புகை மற்றும் மது பழக்கம் உள்ளவர்கள்.
  • குடும்ப மரபு வழியில் புற்றுநோய் இருந்தால் ஏற்படும்.
  • உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள்.
  • அசைவ உணவுப் பிரியர்கள்.
  • தினமும் குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுபவர்கள்.
  • மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோய் உள்ள பெண்கள்.
  • அன்றாடம் போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள்.
  • நிறைவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள்.

22213 total views