புற்றுநோயிலிருந்து இரு மணிநேரத்தில் விடுபட புதுவகை சிகிச்சை....

Report
415Shares

புதுவகை சிகிச்சை முறை 95 வீதம் வரையில் புற்றுநோய் கலங்களை வெறும் இரு மணி நேரத்தில் அழிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறுவைச் சிகிச்சை செய்ய இயலாத இடங்கள் மற்றும் இலகுவில் அடையப்பட முடியாத புற்றுநோய் கலங்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிற்கு இந்த புதிய சிகிச்சை முறை பெரும் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

புற்றுநோய் கலங்களை கொல்லும் இப் புதிய முறை Texas பல்கலைக்கழக பேராசிரியர் Matthew Gdovin அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறையில் Nitrobenzaldehyde எனப்படும் இரசாயனம் புற்றுநோய் கலங்களினுள் செலுத்தப்பட்டு அது இழையங்களினுள் பரம்பலடைய விடப்படுகிறது.

பின்னர் ஒளிக்கற்றைகள் மூலம் குவியப்படுத்தப்பட்டு குறித்த கலங்கள் மிக அமிலத் தன்மையானதாக மாற்றப்படுகிறது. இதனால் அக் கலங்கள் தற்கொலை செய்யப்படுகின்றன.

இது தொடர்பான விடயங்கள் Clinical Oncology எனப்படும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை மிக உக்கிரமாக இலகுவில் கட்டுப்படுத்தப்பட முடியாத மார்பக புற்றுநோய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

14546 total views