லண்டனில் தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி! சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவும் காணொளி

Report
293Shares

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி அச்சறுத்தல் விடுத்து செய்கை காட்டியுள்ளார்.

இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் பாரிய சர்ச்சை நிலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியின் மீது சகலரினதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்யும், காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் வினவிய பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

12125 total views