உங்க கனவில் தங்கம் வருவதுபோல் கனவுகண்டால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அதிர்ஷ்டசாலி நீங்களாவும் இருக்கலாம்..!

Report
373Shares

கனவு என்பது அனைவரும் தூக்கத்தில் உணரக் கூடிய ஒன்று. கனவு நம் ஆழ்மனதின் எண்ண அலைகளால் ஏற்படுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஒவ்வொரு இரவிலும் அனைவரும் கனவு காண்கிறோம். அதில் அனைத்தும் நம் நினைவில் இருப்பது இல்லை. சில கனவுகள் மட்டுமே நம் நினைவில் நிற்கும். அப்படி காணும் கனவுகளுக்கு நம் முன்னோர்கள் சில பலன்களை கூறியிருக்கிறார்கள். இங்கு நகைகளை கனவில் பார்த்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம்.

கனவுகளை எப்போது நினைவில் கொள்வோம்

ஏன் சில கனவுகள் மட்டும் நினைவில் நிற்கின்றன என சிந்தித்திருக்கிறீர்களா? அதற்கும் கரணம் இருக்கிறதா என்றால், ஆம் என்பதே அதற்கான பதில். நாம் காணும் கனவானது வித்தியாசமாக, வேடிக்கையான, பயப்படுத்துவதாக மற்றும் நாம் விரும்புவதாக இருக்கிறதோ அப்போது மட்டுமே நம் மனதில் பாதிக்கிறது என்பது அறிவியலின் கருத்து.

நகையை கனவில் காண்பதின் போது பலன்

குறிப்பாக, நகைகள் கனவில் வருவது வரப்போகும் பெரிய செலவை உணர்த்தக் கூடிய ஒன்று. அது திருமணம் அல்லது குடும்பத்துடனான சுற்றுலா போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எப்போதாவது கனவில் நகைகளை பார்த்தால், அது உங்கள் சந்தோச தருணத்தின் செலவினை குறிக்கும் ஒன்று. நகையை அதிகமாக கனவில் பார்த்தாலோ அல்லது குறைவாக பார்த்தாலோ நல்லதிற்கே.

நகையை பரிசளிப்பது

நீங்கள் நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டாலோ அல்லது உங்கள் துணை நகையை பெறுவதை போல் கனவு கண்டாலோ, நீங்கள் விரைவில் மிகப் பெரிய இலாபத்தை ஈட்ட போகிறீர்கள் என்று அர்த்தம். இது உங்களுக்கு மிகப்பெரிய தொழில் வாய்ப்பை உங்கள் அலுவலக வேலையிலோ அல்லது சுய தொழிலோ தரப் போவதாக அர்த்தம். மேலும் நீங்கள் செல்லும் சுற்றுலாவும் உங்களுக்கு இலாபகரமாக அமையும். எப்படியோ பணமோ அல்லது மகிழ்ச்சியோ உங்களுக்கு காத்திருக்கிறது என்று அர்த்தம்.

நகை அணிந்திருப்பது போல் கனவு வந்தால்

நகையை பற்றி காணும் எல்லா கனவும் நல்ல பலனை தராது. யாராவது ஒருவர் நகையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், உங்கள் நெருங்கிய உறவினருக்கு உயிர் போகும் நிலை வரப் போவதாக அர்த்தம். அதுமட்டுமின்றி, உங்களுக்கு நெருக்கிய ஒருவருக்கு வேலை இழப்போ அல்லது திருமணம் நிற்கும் நிலையோ ஏற்படப் போவதை உணர்த்துவது. இது ஏதோ ஒன்றின் முடிவு உணர்த்த கூடிய ஒன்றாகவோ அல்லது உங்களை மகிழ்ச்சியை குறைக்க கூடிய ஒன்றாகவோ இருக்கும்.

திருமண பெண்

மேற்சொன்ன கனவு கெட்ட அறிகுறியாக இருந்தாலும், அப்படி நகை அணிந்திருப்பது திருமண பெண் என்றால் அதன் பலன் மாறுபடும். இது மகிழ்ச்சிக்கான அறிகுறி. இது உங்கள் நெருக்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் ஏற்பட போவதற்கான அறிகுறி. மேலும் இது குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறியாகவோ அல்லது கருத்தரிக்க போவதற்கான அறிகுறியாக இருக்கலாம். எப்படியோ இது மகிழ்ச்சியை குறிக்க கூடிய ஒன்று தான்.

நகையின் மற்ற அர்த்தங்கள்

கனவு மட்டுமின்றி, நகை மனித வாழ்வின் மற்ற பகுதிகளிலும் நிறைய அர்த்தங்களை கொண்டுள்ளது. நகைகள் மனிதர்கள் அவர்களின் அழகை வெளிக்காட்டக் கூடிய ஒன்று. மேலும் இது சமுதாயத்தில் அவர்களின் தரம் சார்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. எப்படி இருந்தாலும், நீங்கள் பணக்காரர்களாக இருந்தால் மட்டும் நகைகளை வாங்க முடியும் என்பது உண்மையல்ல.

தனிப்பட்ட மதிப்புகள்

எதுவாக இருப்பினும் விலை உயர்ந்த நகைகள் அணியும் முன் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் நகைகளுக்கான பாராட்டுக்கள் கிடைக்காத இடத்திற்கு நகைகள் அணிந்து செல்வது தேவையில்லாத ஒன்று. விலை உயர்ந்த நகைகள் அணிந்து செல்லும்போது கூட்டம் அதிகமில்லாத இடத்திற்கு செல்வதே நல்லது.

10195 total views