மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் குழந்தைகள் முன்பு மருமகள் செய்த காரியம்

Report
0Shares

டார்ச்சர் செய்த மாமியாரை தலையில் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் யோகிதா என்ற பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

அதன் பிறகு விதவையான அந்த பெண் தனது குழந்தைகளுடன் மாமியார் தாராபாய் கராலேவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாமியார், மருமகளுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மாமியார் மருமகளை தகாத வார்த்தைகளால் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளியன்று இதே போன்று இருவருக்கும் சண்டை ஏற்பட, இதில் ஆத்திரமடைந்த மருமகள் தனது குழந்தைகள் முன்பு மாமியாரை டாய்லெட்டில் இருந்த இரும்பு தடியை எடுத்து தலையில் அடித்துள்ளார்.

இத்தாக்குதலினால் கீழே விழுந்த தாராபாய் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த பொலிசாருக்கு பயந்து, மருமகள் பாத்ரூமிற்குள் சென்று பாத்ரூம் கிளினரை எடுத்து குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.

கதவை உடைத்து உள்ளே செய்ற பொலிசார் குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.