4 மகள்களையும் பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை.. பின்னர் சிக்கியது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Report
174Shares

கேரளா மாநிலத்தை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் அவரது நான்கு மகள்களையும் ஒரு நாளைக்கு ஒருவர் என மாறி, மாறி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள வலஞ்சேரி, என்னும் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு, 17 , 15 , 13 மற்றும் 10 வயதுடைய மகள்கள் இருக்கிறார்கள். நான்கு மகள்களும் அருகாமையில் இருக்கும் பள்ளியில் 11, 9 , 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் மனதை புரிந்து கொள்வதற்காகவும், அவர்களுக்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் நடைபெறும் கவுன்சலிங் திட்டத்தில் தனக்கு நடந்த கொடுமை பற்றி 5 வது படிக்கும் இளைய மகள் அவரது ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்து போன ஆசிரியர்கள், அந்த பெண்ணின், உடன்பிறந்த சகோதரிகளையும் அழைத்து விசாரித்தார்கள். அப்போது, அனைவரும் அவர்களது தந்தை செய்யும் கொடுமை பற்றி ஆசிரியர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அவரது தந்தை குறித்து காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அந்த நான்கு மாணவிகளையும் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் நான்கு பெரும் கற்பழிக்கபட்டத்தை உறுதி செய்தார். தான் பெற்ற பிள்ளைகளை கற்பழித்த அந்த கொடூர குடிகார தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். இந்த சம்பவம் சுற்றியுள்ள பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

loading...