காட்டுப்பகுதியில் ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சடலம்.. நிர்வாண நிலையில் கைப்பற்றிய பொலிசார்..!

Report
93Shares

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில், கடார்னியாகட் உயிரியல் சரணாயலம் இயங்கி வருகிறது. இந்த வனப்பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் போன்ற வேதிப்பொருள் கொண்டு எரிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக அந்த சடலம் கிடந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகள் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்டுள்ளதால், அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கேள்விக்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னரே பதில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3606 total views