திருமணம் செய்ய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த காதலி.. அதிர்ச்சி சம்பவம்..!

Report
177Shares

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலனின் பிறப்புறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ

மகாராஷ்டிராவின் நயா பஸ்தியில் உள்ள கே.ஜி.என். சவுக்கை சேர்ந்த பெண் நீல் நிப்பி (30). இவருடைய காதலர் ரெஹ்மான் கான்(28). ரெஹ்மான் கானுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்நிலையில் நீல் நிப்பியுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி காதலன் ரெஹ்மான் வலியுறுத்தினார். ஆனால், திருமணத்தை பற்றி எப்போது பேசினாலும் தனக்கு அவகாசம் வேண்டும் கூறி தட்டி கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ரெஹ்மான் கானை போனில் தொடர்பு கொண்ட நீல் நிப்பி, தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். காலன் ரெஹ்மான் கானும் நீல் நிப்பியின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது தன்னை திருமணம் செய்யமாறு நீல் நிப்பி மீண்டும் ரெஹ்மானை வற்புறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த காதலன் உன்னுடன் உல்லாசமாக இருக்கத்தான் தொடர்பு வைத்திருக்கிறேனே ஒழிய திருமணம் செய்ய அல்ல என்று கூறினார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த காதலி நீல் நிப்பி ரெஹ்மானிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய காதலி

பின்னர், ரெஹ்மானை கடுமையாக தாக்கி பேண்ட்டை கழற்றிவிட்டு பிறப்புறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இதில், ரெஹ்மான் படுகாயமடைந்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பகத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காதலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7582 total views